EvaPhone

tamil

Sachin – Kanmoodi by By Thaz

பொய் சொல்லப் போறோம்

Double Click on the Video Player to view fullscreen.

Full Screen  

PART 01  
PART 02  

PART 03  
PART 04  

கலவை ஜீஸ்

தேவையானவை
பாசிப்பருப்பு 100 கிராம்
நிலக்கடலை 50 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
வெல்லம் 200 கிராம்

பாசிப்பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கொட்டி கிளறவும்.
அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் ஏலக்காய் பொடியை கொட்டி கிளறி இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்

வாய் துர்நாற்றத்தைப் போக்க

மிகுந்த சிரத்தையுடன் கலையும் மாலையும் பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட்டு வருவது உண்டு.

இத்தகைய அவதிக்கு உள்ளானோருக்கு உதவும் வகையிலான எளிய குறிப்பு இதோ…

தேவையானவை:

ஜாதி மல்லிகை இலை – 2
நார்த்தங்காய் இலை – 2
விளாம்பழ இலை – 2

செய்ய வேண்டியது:

மேற்குறிப்பிட்ட மூன்று வகை இலைகளையும் வாயில் போட்டு மெல்ல வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதைத் துப்பிவிட வேண்டும். அதன்பின், வெந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வாய் துர்நாற்றம் அறவே நீங்கிவிடும்.

கீரை வகைகளும் மருத்துவ குணங்களும்

நோய் வந்த பிறகு அதனைப் போக்குவதற்கு எவ்வளவோ செலவிடுகிறோம். ஆனால், வருமுன் காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட மறந்துவிடுகிறோம். மருத்துவ குணங்கள் இயல்பிலேயே காணப்படும் கீரை வகைகள் இப்போதும்கூட மலிவாகக் கிடைக்கின்றன. அவற்றை அன்றாடம் உட்கொண்டாலே மிகுந்த ஆரோக்கியமாக வாழலாம். எந்தெந்த கீரைகளில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள இதோ சில குறிப்புகள்…
சிறுகீரை
உடலுக்கு அழகும் மிளிர்ச்சியும் கிடைக்கும்* வாத நோய், பித்த நோய் நீங்கும் * கல்லீரல், சிறுநீரகம் நன்மை பெறும் * விஷக்கடி முறியும் அரைக்கீரை* காய்ச்சல், ஜன்னி நீங்கும்* பிரசவித்தப் பெண்களுக்கும் மிகுந்த நன்மை தரும்* குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் * உடல்வலி நீங்கும்
முளைக்கீரை
பசியைத் தூண்டும் * உடல் சூட்டினைத் தணிக்கும் * பித்த எரிச்சல் குணமாகும் * கண் குளிர்ச்சி அடையும்* சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்
அகத்திக்கீரை
குடலில் ஏற்படும் நச்சு நீர்களை வெளியேற்றும் * மலச்சிக்கல் நீங்கும் * குடல்புண் போக்கும் * அரிப்பு, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். * தொண்டைப் புண் வராது * பித்தம் தணியும்
கரிசலாங்கண்ணிக் கீரை
இரத்தத்தை சுத்தம் செய்யவல்லது * கண் பார்வையின் திறன் கூடும் * உடல் வலிமை பெறும் * தோல் வியாதிகள் குணமடையும் * பல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் * மூல வியாதிக்கு மிகவும் உகந்தது * கேசம் மிளிர்வதோடு, நன்றாக வளரும் சோகை பச்சிலை * ரத்த சோகைக்கும் மஞ்சள் காமாலைக்கும் சிறந்த மருந்து * இரத்தம் ஊறும் * உடலில் உத்வேகம் ஏற்படும்
முருங்கைக்கீரை
வாயுத் தொல்லை உடையவர்கள் அடிக்கடி சாப்பிட்டால், அப்பிரச்சனை தீரும். வாதமடக்கி இலை* வாத நோய்க்கு சிறந்த மருந்து. * அடிபட்ட காயத்தில் இரத்தத்தை கட்டுப்படுத்த சாறு உதவும்
தூதுவளைக் கீரை
நாள்பட்ட கபத்தை கரைக்க வல்லது

.

திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்
இன்றைய திருக்கேதீஸ்வரம்
சிவராத்திரி தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உங்கள் தேசிய அடையாள அட்டையை வாயிலில் கொடுக்கவேண்டும் பின்னர் வீடு திரும்பும்போது பயண அனுமதியைக் கையளித்து மீண்டும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கேதீஸ்வரத்தில் வடக்குக் கிழக்கு புனர்நிர்மாண புனரைப்பு நிறுவனம் (NECORD) ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சேவாலங்கா உதவியுடன் மீளக் குடியமரவுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

[தொகு] வரலாற்றுச் சுருக்கம்
திருக்கேதீஸ்வரத்திலிந்து அருட் கண்ணால் 6 மாச் 2002 இல் எழுதப்பட்ட கட்டுரை.

‘மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரு மிவ்வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் தில்லைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுமுனை இவை சிவபூமியே”
இலங்கையை சிவபூமி என்று அறைகின்றார் திருமூல நாயனார். சிறப்புமிகு இச் சிவபூமியின் கண் பழமையும் பெருமையும் புகழும் உடைய சிவத்தலங்கள் பலவிருந்தமை வரலாறு. இவ்வரலாற்றுண்மையினை கி.மு.1800 வரையில் நடந்த இராம இராவண யுத்தத்தின் தரவுகளிலறியலாம்.

இப்பெருமையுடைய ஈழத்திருநாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தமாய மூன்றுஞ் சிறப்பாமையப் பெற்ற திருத்தலம் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலாமாம்.

பெருந்தவமுடையோராயா கேது, மயன், மாதுவட்டா, மண்டோதரி, இராமர், அகத்தியர் போன்ற தவமுடையோர் வழிபாடாற்றி தங்குறை தீர்த்து மீண்ட வரலாறு கொண்ட தலம் இத்திருத்தலம்.

கேது பூசித்த தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறா நிற்பர். இக்கோயில் மாதோட்ட நன்னகரில் அமைந்துள்ளது. சூரபதுமன் தன் மனையாளனின் பேரனார் பெயர் துவட்டா எனக் கூறப்படுகின்றது. துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்தில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தமை உணரப் பாலது.

இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்குக் காயாவில் கடனாற்றும் புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இத்தீர்த்ததின் மகிமையும் சிறப்புமாகும்.

இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது போதரும் இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமிதுவாகும்.

ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும்

அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருப்பது வெள்ளிடை. இத்தகு சீர்பூத்த திருத்தலம் காலவெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமடைந்து மண்மேடானமை வரலாற்று உண்மையாகும்.

இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமை ஆய்வாளர்தம் துணிவாகும்

திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலையென்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் நாளுங்கானமுடிகின்றது

அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.

பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.

போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது.

அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத் திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.

காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது

சைவக் கொள்ககட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல்.
மேற்கூறிய கொள்கை கோட்பாடு வரையறைகட்கு மாறில்லாத வகையில் செயற்படுதல். ஏனைய இறை வணக்கத் தலங்களை உருவாக்குதலும் துணைபுரிதலும்
மக்கள் தங்குமடங்கள், கல்விக் கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற அன்றாட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல
போன்ற பல அரிய செயல்க்ளைப் புரியச் சபையத் தயார்படுத்தல் போன்ற உயரிய செயல்களை விரைந்து நடைமுறைப்ப்படுத்த முயற்சிப்பதென உறுதி பூணப்பட்டது. 10 பெப்ரவரி 1951இல் பொது உடமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சபையாகத் திகழ்ந்தது. சபையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்பும் கோயில் உருமைகள் நாட்டுக்கோட்டை நகரப் பெரியார்களிடமே இருந்து வந்தது. காலப்போக்கில் 14 செப்ரம்பர் 1951இல் நாட்டுக்கோட்டை நகரத்தார் உளமகிழ்வுடனும் நல் இணக்கத்துடனும் திருப்பணிச் சபையாரிடம் பரிபாலனம் கைமாற்றப்பட்டது.

பொறுப்புக்கள் கையேற்கப்பட்ட காலம் முதல் அரிய பெரிய திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொழும்பு பழைய, புதிய கதிரேசன் கோயில் திருப்பணிச் சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் அறங்காவலர்களாகவும் (ஐவர்) பஞ்சாயத்தவர்களாகவும் நியமனம் பெற்று சபையை நடாத்திவரத் திருக்கேதீச்சரத் திருப்பணிப் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள் “திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்” என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார்.

ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டுயாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று.

1894ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது.

மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது

இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள், சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்

கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

கருங்கல்லால் கட்டப்பட்ட கௌரியம்பாள் கோயில் எமது மலேசியா திருப்பணிச்சபைக் கிளையினரால் அமைக்கப்பட்டதாகும். இத்திருக்கோயிலில் நிறுவப்பெற்றுள்ள கருங்கல் திருப்படிகங்களில் பெரும்பாலான படிமங்கள் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திருக்கோயிலில் 1952லும் 1960லும் ஆண்டிலும் திருவுருவப்படங்கள் நிறுவப்பட்டு இருமுறை குடமுழுக்காட்டப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முடிந்தவரை பல்வகைத் தொல்லைகட்காளாகிய நிலமையையும் பொருட்டாக நினைக்காது முயன்று தம்மையே ஈசற்கீந்து அரும்பாடுபட்டு இத்திருக்கோயிலை எடுத்த பெருமை சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் மண்மேடாகவும் சேறாகவுமிருந்த பாலாவித் தீர்த்தக் குளத்தை வெட்டி அணையிட்டு செம்மையுறச் செய்திட்ட நீர்ப்பான பொறியியலாளர் அருளாளர் எஸ்.ஆறுமுகப் பெருந்தகையையும் சைவ உலகு என்றும் மறவாது

திருக்கேதீசரத்திற்குச் செல்லும் அடியவர்களின் வசதிகள் உளத்தில் கொண்ட அருளுள்ளத்தினர் பெருந்தனவந்தர்கள், அரச நிறுவனங்கள் ஆலயச் சூழலில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நகரத்தார் மடம், நாவலர் மடம், அம்மா சத்திரம், திருப்பதி மடம், திருவாசக மடம், மகாசிவராத்திரி மடம், பொன்னாவெளி உடையார் மடம், நாதன் சத்திரம், மலேசியா மடம், கதிர்காமத் தொண்டர் மடம், மகாதுவட்டா மடம், பூனகரி மடம், அடியார் மடம், நீர்பாசன மடம், சிவபூசை மடம், நரசிங்கர் மடம், கட்டடத்திணைகள மடம் என பல்வேறு திருமடங்களை நிறுவி அடியார்கட்காறுதலளித்த பெருமைகளாயின.

அது மட்டுமா? ஒரு நகரத்தை அழகுசெய்வதற்குரிய மருந்தகம், மக்கள் நலம் பேணகம், ப.நோ.கூ. சங்கம், கி.மு.சங்கம், கி.அ.சங்கம், கிராமோதய சபை, நீர்வழங்கல் சபை, அஞ்சலகம், அங்காடிகள் போன்ற மிகமிக அவசியமான அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தமை கண்கூடு.

ஏதுங் குறையிவின்றி எல்லாமமைந்து தன்னிறைவு பெற்றிருந்த திருக்கோயிற் திருவிடம் திருக்கோயிலைத் தவிர்ந்த அனைத்து வளங்களும் அழிந்து போய் பழமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளமை உள நோவைத் தாராதிருக்கின்றது.

1976ஆம் ஆண்டு வெகு சிறப்புடன் திருக்கோயில் திருக்குடத் திருமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நிகழ்த்தப் பெற்று 1990ஆம் ஆண்டுவரை நித்திய நைமித்திய பெருவிழாக்கள் நடைபெற்று வந்நதன

1990க்குப் பின் பூசையோ பெருவிழாக்களோ நடைபெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் காடு மண்டிக் களையிழந்து காட்சிதருவது கண்கூடு

இக்கால எல்லையில் ஐந்து திருத்தேர்கள் முயன்று உருவாக்கப்பட்டு வீதிவலம் வந்தகாட்சிதனை அருளடியார்கள் மறந்திருக்கமுடியாது. முதற்பெருந் தேரில் உலாவர உலகிலேயே பெரிய சோமாஸ்கந்த தெய்வத்திருவுருவம் வடிக்கப்பட்டு உலாவந்த காட்சி அருளாளர்களால் என்றும் மறக்ககமுடியாத காட்சியாகும்.

புதுமியான சிற்பங்களைக் கொண்ட திருக்கோயிலையுந் திருத்தேர்களையும் அமைத்த பெருமை தமிழ்நாடு மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி வினைஞர்களையும் பழனி சிற்பக்கலாவல்லுனர்களையும் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சீவரத்தினம் எனும் சிற்பக்கலா வல்லுனர்களையும் சார்ந்ததென்றால் அது மிகையாகாது.

இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது.

தமிழ் மக‌ன் › புதிய இடுகையை உருவாக்கவும் — WordPress

அக்டோபர் 9 நிகழ்வுகள்

1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
1804 – டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1806 – பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது.
1820 – கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1831 – கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார்.
1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1854 – ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.
1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1888 – வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1934 – யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
1941 – பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.
1962 – உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – கெரில்லாத் தலைவர் சே குவேரா, பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார்.
1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
1983 – ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
1989 – ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.
2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

இன்று..

1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்சிக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1852 – ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1899 – இரண்டாவது போவர் போர் தென்னாபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.
1941 – மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
1944 – துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.
1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
1984 – சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.
1998 – கொங்கோவில் வானூர்தி ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்