1003 – லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1604 – சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1760 – ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
1771 – டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
1804 – டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1806 – பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது.
1820 – கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1831 – கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார்.
1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1854 – ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.
1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1888 – வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1934 – யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
1941 – பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.
1962 – உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – கெரில்லாத் தலைவர் சே குவேரா, பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார்.
1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
1983 – ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
1989 – ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.
2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது மகாத்மா காந்தி | குறிச்சொற்கள்: அக்டோபர் 9 நிகழ்வுகள்

