மிகுந்த சிரத்தையுடன் கலையும் மாலையும் பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட்டு வருவது உண்டு.
இத்தகைய அவதிக்கு உள்ளானோருக்கு உதவும் வகையிலான எளிய குறிப்பு இதோ…
தேவையானவை:
ஜாதி மல்லிகை இலை – 2
நார்த்தங்காய் இலை – 2
விளாம்பழ இலை – 2
செய்ய வேண்டியது:
மேற்குறிப்பிட்ட மூன்று வகை இலைகளையும் வாயில் போட்டு மெல்ல வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதைத் துப்பிவிட வேண்டும். அதன்பின், வெந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வாய் துர்நாற்றம் அறவே நீங்கிவிடும்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது ஆரோக்கியம் | குறிச்சொற்கள்: வாய் துர்நாற்றத்தைப் போக்க

